Advertisements

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் மிக அருகில் நெருங்கி விட்டது இந்த சூழ்நிலையில் கூட்டணி விவகாரத்தை பொருத்தவரையில் பிரேமலதா விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்க போகிறது என்பது ஒருவித எதிர்பார்ப்பாக இருக்கிறது.
பிரேமலதா விஜயகாந்த்தை பொருத்தவரையில் அதிமுக திமுக ஆகிய இரு கட்சிகளிடமும் கூட்டணி நிலவரம் குறித்து பேசி வருகிறார் ஆனால் இதில் உடன்பாடுகள் எதுவும் ஏற்படவில்லை.இறுதி கட்டமாக திமுகவுடன் கூட்டணி சேரலாம் என பிரேமலதா விஜயகாந்த் தற்போது ஒரு முடிவு எடுத்து வைத்திருக்கிறார்.இந்த நிலையில் அவருக்கு தற்பொழுது அதிர்ஷ்ட காற்று வீச தொடங்கி இருக்கிறது. அவரது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதியின் பேரில் பாரதிய ஜனதா கட்சியுடன் அவர் இறுதியாக கூட்டணி சேர்கிறார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலத்தில் தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது அந்த தேர்தலில் ஆறு சதவீதத்திற்கும் மேலாக வாக்கு வங்கியை தேமுதிக பெற்றது. ஆனால் இதன் பின்னர் தொடர் சரிவுகளை சந்தித்திருக்கும் தேமுதிக தற்போது பூஜ்ஜியம் புள்ளி 45 சதவீத அளவிலேயே வாக்கு வங்கியை வைத்திருக்கிறது.இருந்தபோதிலும் விஜயகாந்தின் மறைவிற்குப் பிறகு தேமுதிக மீது ஒருவித அனுதாப அலை வீசுவதாக சொல்லப்படுகிறது இது மட்டுமல்லாமல் ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தபட்சம் ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் வரை தேமுதிகவுக்கு வாக்கு வங்கி இருப்பதாகவும் கணக்கிடப்பட்டு இருக்கிறது.
மேலும் தேமுதிக கூட்டணியில் சேர்த்தால் பிரேமலதா விஜயகாந்த் பெண்களை கவரும் வகையில் சிறந்த பிரச்சார பீரங்கியாக இருப்பார் என்றும் கருதப்படுகிறது.இதன் அடிப்படையில் அவரைக் கூட்டணியில் சேர்த்துக் கொள்ளலாம் என அதிமுக திமுக என இரண்டு கட்சிகளுமே விரும்புகிறது.ஆனால் இந்த சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு பிரேமலதா விஜயகாந்த் ஏராளமான கோரிக்கைகளை முன்வைத்து வருகிறார்.ஒவ்வொரு கட்சியுடனும் கூட்டணி சேருவதற்கு ஒவ்வொரு விதமான கோரிக்கைகளை வைக்கிறார்.
அதிமுகவுடன் கூட்டணி சேருவதற்கு குறைந்தபட்சம் 14 தொகுதிகள் ஒதுக்கி தர வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார் இந்த தகவலை எடப்பாடி பழனிச்சாமியேவெளியே தெரிவித்து இருக்கிறார்.இது மட்டுமல்லாமல் 14 தொகுதிகளுக்கும் தலா ஒரு தொகுதிக்கு 20 கோடி ரூபாய் அளவில் செலவு நிதி தர வேண்டும் என கோரிக்கை வைக்கிறார்.மேலும்,விருதுநகர் தொகுதியை தனக்கு கட்டாயம் ஒதுக்கி தர வேண்டும் இந்த தொகுதியில் விஜய பிரபாகரன் போட்டியிடுவார் ஒருவேளை அவர் வெற்றி பெற்று விட்டால் சட்டமன்ற உறுப்பினராகவும் வெற்றி பெறாவிட்டால் விஜய பிரபாகரனுக்காக ஒரு ராஜ்யசபா பதவியை தர வேண்டும் என்றும் தமிழக அமைச்சரவையில் தனக்கு ஒரு பதவி தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகிறார்.
இதற்கு அதிமுகவில் முழுவதுமாக மறுப்பு தெரிவிக்கப்பட்டு விட்டது.அதே வேலையில் திமுக தரப்பில் பிரேமலதா கோரிக்கைகள் வைத்த போது எட்டு தொகுதிகள் ஒதுக்கி தரப்படுவதாகவும் இறுதிக்கட்டமாக 10 தொகுதிகள் வரை ஒதுக்கி தரலாம் என்றும் பேசப்பட்டு இருக்கிறது.இது தவிர ஆண்டாள் அழகர் கல்லூரியை விற்ற வகையில் வரா கடனாக மீதமுள்ள 150 கோடி ரூபாயை வசூலித்து தருவதாகவும் திமுக தரப்பில் வாக்குறுதி தரப்பட்டு இருக்கிறது.
தேமுதிக போட்டியிடும் தொகுதிகள் அனைத்திலும் தேர்தல் செலவு நிதிகளை திமுகவே பார்த்துக் கொள்ளும் என்றும் பேசி இருக்கிறார்கள்.இதன் அடிப்படையில் திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என பிரேமலதா விஜயகாந்த் இறுதி முடிவு எடுத்து வைத்திருக்கிறார்.தற்பொழுது இது பற்றிய தகவல் டெல்லி பாஜக மேல் இடத்திற்கு உளவுத்துறை மூலம் அனுப்பப்பட்டு இருக்கிறது.
டெல்லி பாஜகவை பொறுத்தவரையில் அதிமுக கூட்டணி இன்னமும் பலம் பெறவில்லை என்ற கருத்து நிலவுகிறது பிரதமர் மோடியே உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அழைத்து தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியை இன்னும் பலப்படுத்த வேண்டும் அதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள் என்று கூறியிருக்கிறார்.அந்த வகையில் தேமுதிகவை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்பது டெல்லி பாஜக மேல் இடத்து விருப்பமாக இருக்கிறது.
இது குறித்து அமித்ஷா எடப்பாடி பழனிச்சாமியை தொடர்பு கொண்டு பேசிய நிலையில் தான் பிரேமலதா விஜயகாந்தின் கோரிக்கைகள் அதிகமாக இருப்பதால் ஏற்க முடியாது என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துவிட்டார்.தற்பொழுது தேமுதிகவை கூட்டணி சேர்த்துக்கொள்ள டெல்லி பாஜகவை நேரடியாக களம் இறங்குகிறது.ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் 23ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வந்த நிலையில் அனைத்து கூட்டணி கட்சிகளையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்த வேண்டும் என ஏற்பாடுகள் செய்யப்பட்டது ஆனால் அது நிறைவேறவில்லை.
இந்த நிலையில் வருகிற 28ஆம் தேதி பிரதமர் மோடி மீண்டும் மதுரை வருகிறார் இந்த மதுரை மாநாட்டில் மீண்டும் அதிமுக கூட்டணியின் பலத்தை காட்ட வேண்டும் என்பது டெல்லி பாஜகவின் விருப்பமாக இருக்கிறது.அந்த வகையில் பிரேமலதா விஜயகாந்த் உடன் புதிதாக கூட்டணி பற்றிய பேச்சு வார்த்தைகள் தொடங்குகின்றன.
ஏற்கனவே டெல்லி பாஜக மேல் இடத்தில் இருந்து பிரேமலதா விஜயகாந்த்தை தொடர்பு கொண்டு உங்களுடைய கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். தொகுதி பங்கீட்டை பொறுத்தவரையில் பாரதிய ஜனதா கட்சிக்கு கூடுதலான தொகுதிகளை பெற்று அதிலிருந்து உங்களுக்கு தேவையான தொகுதிகளை ஒதுக்கி தருகிறோம் வேறு மாநிலம் வழியாக ராஜ்யசபா பதவியும் உங்களுக்கு தருகிறோம் தேர்தல் செலவு பற்றி கவலைப்பட வேண்டாம் அவை அனைத்தும் பாஜக பார்த்துக் கொள்ளும் என்றெல்லாம் பேசி இருக்கிறார்கள்
கடுமையான போராட்டத்துக்கு மத்தியில் பிரேமலதா விஜயகாந்த் இறுதியாக தான் நினைத்ததை தற்போது சாதித்து இருப்பதாக தெரிகிறது .அவருடைய கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என பாஜக வாக்குறுதி கொடுத்திருப்பதால் இறுதி கட்டமாக பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து விடலாம் மேலும் தேர்தல் நெருங்கி விட்டதால் கால அவகாசமும் குறைந்துவிட்டது என பிரேமலதா விஜயகாந்த் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்.அந்த வகையில் டெல்லி பாஜக மேல் இடத்தில் அவர் தற்பொழுது சம்மதம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது .
இதேபோல் ஓ பன்னீர்செல்வம் திரை மறைவில் டெல்லி பாஜகவிடம் பேசியிருக்கிறார். அவரையும் மீண்டும் கூட்டணியில் சேர்த்துக் கொள்வது என டெல்லி பாஜக இறுதி முடிவு எடுத்திருக்கிறது.எனவே வருகிற 28ஆம் தேதி பிரதமர் மோடி மதுரை வரும்பொழுது அதே மேடையில் ஓ பன்னீர்செல்வம் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட இருக்கிறார். ஏற்கனவே அவர் எடப்பாடி பழனிச்சாமியை அண்ணன் என்று அழைத்து அவரது காலடியில் விழுந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் பாஜகவுடன் ஓ பன்னீர்செல்வம் கூட்டணி சேருவதற்கு எடப்பாடி பழனிச்சாமி மறுப்பு தெரிவிக்க மாட்டார் என சொல்லப்படுகிறது.
இதன் நிமித்தமாக தான் ஓ பன்னீர்செல்வம் இரண்டு நாள் மௌன விரதம் இருந்து திருச்செந்தூர் முருகன் தரிசித்து வந்ததாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே அவர் தனக்கு ஒரு நல்ல கூட்டணி அமைய வேண்டும் என திருச்செந்தூர் முருகனை வேண்டிக் கொண்டதாகவும் தற்பொழுது அந்த வேண்டுதல் நிறைவேறி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.தமிழக அரசியலைப் பொறுத்தவரையில் ஓ பன்னீர்செல்வம் என்ன செய்யப் போகிறார் பிரேமலதா என்ன செய்யப் போகிறார் என்பதற்கான விடைகள் தற்போது கிடைத்திருக்கின்றன இவர்கள் மட்டும் அல்லாமல் தற்பொழுது மருத்துவர் ராமதாஸ் என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி மட்டுமே மீதம் இருக்கிறது.
மருத்துவர் ராமதாஸும் தனது கூட்டணிகுறித்து தைலாபுரத்தில் அடுத்த வாரம் வியாழக்கிழமை ஆலோசனை நடத்துகிறார் எனவே அவர் தரப்பிலும் அடுத்த வாரம் ஒரு முடிவு அறிவிக்கப்படும் என தெரிகிறது.கூட்டணி விவகாரத்தை பொருத்த வரையில் தற்பொழுது அதிமுக தரப்பில் இறுதி வடிவம் பெற்றுள்ளது தேமுதிகவும் ஓ பன்னீர்செல்வமும் இணைந்து விட்டால் அதிமுகவுடன் கூட்டணி இறுதி முடிவு செய்யப்பட்டு விடும். ஆனால் அதே சமயத்தில் தொகுதி பங்கீடு குறித்து மேலும் பிரச்சினை நீடிக்கும் என தெரிகிறது.இதேபோல் திமுக தரப்பிலும் அனைத்து கூட்டணி கட்சிகளும் முடிவாகிவிட்டாலும் தொகுதி பங்கீடு குறித்து மீண்டும் இழுபறிகள் நிலவி வருகிறது என்பது முக்கிய செய்தியாகும்.
Advertisements



