Advertisements

மகளிர் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் டெல்லியை வீழ்த்தி பெங்களூரு அணி 2 ஆவது முறையாகச் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
குஜராத் மாநிலம், வதோதராவில் மகளிர் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற பெங்களூரு அணி பவுலிங் தேர்வு செய்தது. இதன்படி, முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி 19 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில், மிகவும் சிறப்பாக விளையாடி ஜார்ஜியா வோல் 79 ரன்களும், கேப்டன் ஸ்மிருதி மந்தனா 87 ரன்களும் எடுத்து அசத்தினர். தொடர்ந்து, இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
Advertisements



