“மும்மொழி கட்டாயம்” மத்திய அரசுக்கு எதிராக பொதுநல மனு.!

Advertisements

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் மும்மொழி கட்டாயம் என்ற மத்திய அரசிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில். பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.. சி.பி.எஸ்.இ. எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் மாற்றத்தை அறிவித்துள்ளது.

அதன்படி, வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பயிலும் 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்று மொழிகள் படிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த உத்தரவிற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கிடையே, உச்சநீதிமன்றத்தில், இந்த விவகாரம் தொடர்பாக பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சங்கம் சார்பில், மத்திய அரசின் முடிவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில், பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க கோரி தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு செய்யப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அடுத்த வாரம் வழக்கை விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *