Ukraine : ரஷ்ய ராணுவம் தாக்கியுள்ளதால் மின்வெட்டு.!

Advertisements

உக்ரைனின் ஒடேசா மண்டலத்தில் மின்னுற்பத்தி நிலையங்கள், துறைமுகங்கள் ஆகியவற்றை ரஷ்ய ராணுவம் தாக்கியுள்ளதால் அப்பகுதியில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் மூன்றாண்டுகளாகத் தாக்குதல் நடத்தி வருகிறது.

ஒடேசா மண்டலத்தை நோக்கி ரஷ்ய படைகள் முன்னேறி வருவதாகக் கடந்த வாரத்தில் உக்ரைன் துணைப் பிரதமர் அலெக்சி குலேபா கூறியிருந்தார்.

இந்நிலையில் ஒடேசா மண்டலத்தில் மின்னுற்பத்தி நிலையங்கள், துறைமுகம் ஆகியவற்றின் மீது ரஷ்ய ராணுவம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலின் விளைவாக ஏற்பட்ட தீவிபத்தில் துறைமுகத்தில் எண்ணெய், மாவுப்பொருட்கள் ஆகியவற்றை ஏற்றியிருந்த இருபதுக்கு மேற்பட்ட சரக்குப்பெட்டகங்கள் தீக்கிரையாகின.

இந்தத் தீவிபத்தால் ஏற்பட்ட மின்வெட்டால் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் மக்கள் மின்சாரம் இன்றித் தவிக்கின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *