திமுக 15 கோடி ரூபாய் கொடுத்தது உண்மை தான் – வீரபாண்டியன்

Advertisements

தேர்தல் செலவுக்காகத் திமுக 15 கோடி ரூபாய் கொடுத்தது உண்மை தான் என்றும் அது தேர்தலுக்குச் செலவாகி விட்டது என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கீரமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு, மூத்த தலைவர் நல்லக்கண்ணு நூற்றாண்டு ஆகியவற்றையொட்டிப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஒன்றியச் செயலாளர் தமிழ்மாறன், முத்து உத்திராபதி, மாவட்டச் செயலாளர் செங்கோடன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பேசிய மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், தேர்தலுக்காக திமுக 15 கோடி ரூபாய் கொடுத்தது உண்மைதான் என்றும் அது தேர்தலுக்குச் செலவாகிவிட்டதாகவும் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *