மத்திய பிரதேசத்தில் வேன் மீது லாரி மோதி கோர விபத்து !! 9 பேர் பலி

மத்திய பிரதேசத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி, 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் சிலர் உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு, வேனில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, ஜபுவா மாவட்டம் அருகே வேன் சென்றபோது, அந்த வழியாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து வேன் மீது மோதியதாக கூறப்படுகிறது. இந்த கோர விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் பலத்த காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *