திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோவிலின் இடுக்கில் சிக்கி பக்தர் உயிரிழப்பு!

இடுக்கு பிள்ளையார் கோவிலின் இடுக்கில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஆந்திர மாநில  பக்தர்  உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கார்த்திகை தீபம் மற்றும் பௌர்ணமி நாளையொட்டி ஏராளமான பக்தர்கள் வருகை தந்து  அண்ணாமலையாரையும், கிரிவலப்பாதையில் உள்ள கோவில்களையும் வழிபட்டனர்.

 

இந்நிலையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஆன்மீக பக்தர் மணிக்குமார் என்பவர் கிரிவலப்பாதையில் அமைந்துள்ள இடுக்கு பிள்ளையாரை தரிசனம் செய்ய சென்ற போது உடல் பருமன் காரணமாக கோவில் இடுக்கிலிருந்து வெளியே வர முடியாமல் அவதிப்பட்டு மூச்சுத் திணறல் ஏற்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம்  பக்தர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *