தவெ.க அரசு பாஜகவின் சிலீப்பர் செல்லாக இயங்குகிறது – முன்னாள் அமைச்சர் ரகுபதி!!

Advertisements

த.வெ.க அரசு முழுக்க முழுக்க பா.ஜ,கவின் ‘சிலீப்பர் செல்லாக’ இயங்குகிறது என முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டியுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை சந்திவிட்டு முன்னாள் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, த.வெ.க ஆட்சியில் பேச்சுரிமை பறிக்கப்பட்டுள்ளது என்றும் அரசை விமர்சித்து சாதாரண பேச்சுவாக்கில் பேசுபவர்கள் மீதெல்லாம் பொய் வழக்கு போடப்படுகிறது என்றும் குற்றம் சாட்டினார்.

த.வெ.க அரசு முழுக்க முழுக்க பா.ஜனதாவின் ‘சிலீப்பர் செல்லாக’ இயங்குகிறது என்றும் பாஜக மிரட்டுவதற்கு ஏற்ப செயல்படாவிட்டால் தங்களுக்கு வரும் நிதி நின்றுவிடுமோ என்ற பயத்திலேயே த.வெ.க. அரசு செயல்படுகிறது என்றும் விமர்சித்தார். தொடர்ந்து பேசிய ரகுபதி, சட்டமன்றக் கதவுகளை மூடுங்கள்’ என முதலமைச்சர் விஜய் கூறியது உறுப்பினர்களை சிறை வைப்பதற்கு சமம் என்றும் ஜனநாயக உரிமை மீறல் என்று குறிப்பிட்டார். கோவிலுக்கு சொந்தமான நிலங்களைப் பட்டா மாற்றம் செய்து சூறையாடுவதும், அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளது என்றும் குற்றம் சாட்டினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *