V. Senthil Balaji’s bail: தள்ளுபடி!

Advertisements

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தள்ளுபடி!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு  ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்உத்தரவிட்டுள்ளது.

சென்னை: சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் பதிவான வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜியை கடந்த ஜூன் 14-ந் தேதி மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இந்த வழக்கில் அவர் ஜாமீன் கேட்டுத் தாக்கல் செய்த மனுவைச் சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு 2 முறை தள்ளுபடி செய்தது.

இதைத்தொடர்ந்து, தன் உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ளதால், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் அமைச்சர் செந்தில்பாலாஜி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

இந்த நிலையில் ஜாமீன் மனுமீதான தீர்ப்பை நீதிபதி இன்று காலை 10.30 மணிக்குவிசாரித்தார்.அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு   ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தார்.  V. Senthil Balaji’s bail

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *