Sukha Duneke: கனடாவில் மேலும் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொலை!

இந்தியாவின் என். ஐ. ஏ அமைப்பால் தேடப்பட்ட்டு வந்த தீவிவாதி சுக்கா துனேக் சுட்டுக் கொலை…

2019-ல் போலி ஆவணங்கள் மூலமாகக் கனடாவுக்கு தப்பிச் சென்ற சுக்கா துனேக் எனும் சுக்தூல் சிங்மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். போலி பாச்போர்ட்டில் கனடாவில் தலைமறைவாகியிருந்த நிலையில் குழு மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கெனவே காலிஸ்தான் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி ஹர்தீப் சிங்ஹ் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் 18-ஆம் தேதி கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டார். மத்திய அரசு தேடப்படும் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியாவை சம்மந்தப்படுத்தி செய்திகள் வெளியாகின. பஞ்சாபை இந்தியவிலிருந்து பிரித்துச் சீக்கியர்களுக்காகப் பெறுத் தர முயற்சி மேற்கொண்டிருந்த நிலையில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஜி-20 மாநாட்டிற்குப் பிறகு கனடாவிற்கும், இந்தியாவிற்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டதாக ஊடகங்கள் மூலமாகச் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இதனால் கனடாவிற்கும் இந்தியாவிற்கும் கருத்து வேறு பாடு ஏற்பட்டு பனிப்போர் நிகழ்ந்து வந்த நிலையில், இந்திய தூதரக இயக்குநரைக் கனடாவை விட்டு வெளியேறுமாறு, கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூட்டொ அறிவித்ததைத் தொடர்ந்து இந்தியாவும் கனடா தூதரை இந்தியாவை விட்டு ஐந்து நாட்களுக்குள் வெளியேறுமாறு அறிக்கை விடுத்தது. நமது பிரதமர் மோடி, கனடாவில் வாழும் இந்தியகளுக்கு எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தியிருந்தது குறிப்பித்தக்கது.

ஏற்கனவே ஒரு பிரிவினைவாதி கொல்லப்பட்ட நிலையில் இந்தியா மீது குற்றம் சாட்டிய கனடா இப்போது மற்றுமொரு பிரிவினைவாதி, அதுவும் இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தால் தேடப்பட்டு வந்தவர் சுட்டுக் கொல்லப்பட்டு இருப்பது உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *