Advertisements

சென்னையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் விளையாட்டு வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் பெறுவதற்கான சிறப்பு உயர் திறன் மையத்தை துணை முதலமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார்.
சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் விளையாட்டு வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் பெறுவதற்கான சிறப்பு உயர் திறன் மையத்தின் திறப்பு விழா அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.
விழாவில், துணை முதலமைச்சர் உதயநிதி பங்கேற்று சிறப்பு உயர் திறன் மையத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து, அங்கு சிகிச்சை பெற்று வரும் பயனாளிகளிடம் நலம் விசாரித்தார். பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, பேசிய அவர் தமிழக விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் நோய்களுக்கு தீர்வு காண்பதற்காகவே இந்த சிறப்பு உயர்திறன் மையத்தை திறந்து வைத்துள்ளாதாகத் தெரிவித்தார். இந்நிகழ்வில், மருத்துவத்துறை செயலாளர் செந்தில்குமார், விளையாட்டு துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
Advertisements


