இஸ்ரேல் தாக்குதலில், ஈரான் புலனாய்வு அமைச்சர் இஸ்மாயில் கதிப் உயிர்மாய்க்கப்பட்டதாக ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய புதியத் தாக்குதலில் ஈரான் புலனாய்வு அமைச்சர் இஸ்மாயில் கதிப் உயிர்மாய்க்கப்பட்டதாக, இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், புலனாய்வு அமைச்சர் இஸ்மாயில் கதிப் மற்றும் அவரது குடும்பத்தினர் சிலர் உயிர்மாய்க்கப்பட்டதை ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் உறுதி செய்துள்ளார்.
மேலும், இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைத்தளப் பதிவில், தனது அன்புக்குரிய இஸ்மாயில் கதிப், அலி லாரிஜானி மற்றும் அஜீஸ் நசீர்சாதே ஆகியோரும், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் சிலரும் உயிர்மாய்க்கச் செய்யப்பட்டிருப்பது எங்களைத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது என்று தெரிவித்தார்.

