ராணிப்பேட்டையில் முடிவுற்ற அரசு கட்டிடங்களை அமைச்சர் காந்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் கரடிக்குப்பத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 60 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டிடம், நாயக்கம்பாளையத்தில் 16 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள தானியக்கிடங்கு கட்டிடம் ஆகியவற்றை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி திறந்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து, புது ராமாபுரத்தில் நகரும் நியாய விலை கடையை திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரகலா தலைமை தாங்கினார். மேலும், இந்நிகழ்வில், திமுக மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் வெங்கடேசன், மாவட்ட குழுஉறுப்பினா் கிருஷ்ணமூர்த்தி , ஒன்றிய குழுஉறுப்பினா் மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்.


