கூட்டம் வாக்குகளாக மாறலாம்.. ஆனால் சீட்டுகளாக மாறுமா?

Advertisements
நடிகர் விஜயின் த.வெ.க கட்சி முழுமையான அரசியல் கட்சியாக மாறவில்லை, ரசிகர் மன்றம் போல தான் உள்ளது என் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமர்சித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பேசிய அவர் நடிகர் விஜயின் த.வெ.க கட்சி முழுமையான அரசியல் கட்சியாக மாறவில்லை என்றும் ரசிகர் மன்றம் போலவே தான் நடக்கிறது என்றும் விமர்சித்தார்.
தொடர்ந்து, ரசிகர் கூட்டமே ஆதரவு கூட்டமாக மாறலாம், அந்த ஆதரவு கூட்டம் வாக்குகளாக மாறலாம், ஆனால் அந்த வாக்குகள் சீட்டுகளாக மாறுமா என்பது கேள்விக்குறி தான் என்று கூறினார். இதையடுத்து, காங்கிரஸ் கட்சிக்கு பரஸ்பர புரிதலில் ஒற்றுமை வரும் என்றும், கூட்டணி கட்சிக்கு எவ்வளவு சீட் என்பதை நிர்ணயக்கூடிய இடத்தில் திமுக உள்ளது என்றும் தெரிவித்தார்.
பின்னர், இந்த பேட்டியின் போது மாநகர மாவட்ட தலைவர் மகேந்திரன், முன்னாள் மாநகரத் தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *