“சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்” – எடப்பாடி , ராமதாஸ் ஆகியோர் வரவேற்பு..!

Advertisements

வரவிருக்கும் பிரதான மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது சாதிவாரி கணக்கெடுப்பும் சேர்த்து நடத்தப்படும் என இன்று நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.மேலும் அவர், 2010ம் ஆண்டு, அப்போதைய பிரதமராக இருந்த மன்மோகன் சிங், ‘சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் அமைச்சரவையில் பரிசீலிக்கப்பட வேண்டும் எனக் கூறியதாகவும், காங்கிரஸ் கட்சி சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்த்ததாகவும் குற்றம்சாட்டினார்.

“காங்கிரஸ் கட்சி எப்போதுமே சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக இருந்துள்ளது. இப்போது சில மாநில அரசுகள் அரசியல் நலனுக்காகச் சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்கின்றன, அவை வெளிப்படையாக நடத்தப்படவில்லை.” என்றும் கூறினார்.காங்கிரஸ் தலைமையிலான தெலுங்கானா மற்றும் கர்நாடகா மாநில அரசுகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியதைச் சுட்டிக்காட்டுவதாக அவரது பேச்சு அமைந்திருந்தது.

“காங்கிரஸும் அவர்களது ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள கட்சிகளும் சாதிவாரி கணக்கெடுப்பை ஒரு அரசியல் கருவியாக மட்டுமே பயன்படுத்தினர் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.சில மாநிலங்கள் சிறப்பாகக் கணக்கெடுப்பு நடத்தியிருந்தாலும் வேறு சில மாநிலங்கள் அரசியல் கோணத்தில் வெளிப்படையற்ற முறையில் நடத்தின. அதுபோன்ற கணக்கெடுப்புகள் சமூகத்தில் கேள்விகளை எழுப்பியுள்ளன,நமது சமூக கட்டமைப்பு அரசியலால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகச் சாதிவாரி கணக்கெடுப்பு மக்கள்தொகை கணக்கெடுப்பில் நடத்தப்பட வேண்டும். சர்வேயாக அல்ல!” என்றும் அவர் பேசியுள்ளார்.

இந்நிலையில் இதனை வரவேற்று எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி மற்றும் ராமதாஸ் ஆகியோர் அறிக்கை வெளியிட்டு இருக்கின்றனர் .இதன் மூலம் “சாதிவாரி கணக்கெடுப்பு துண்டு துண்டாக மாநில அளவிலான ஆய்வுகளாக அல்லாமல் மக்கள்தொகை கணக்கெடுப்பில் எடுக்கப்படுவதுதான் சிறந்தது.இது நாட்டின் சமூக, பொருளாதார அடித்தளங்களை வலிமைப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டது. நாட்டின் வளர்ச்சிப்பாதை தொடரும்” எனக் கூறியுள்ளார்

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *