கோவை இனி தவெக-வின் அசைக்க முடியாத கோட்டை- விக்னேஷ் உறுதி….!

Advertisements

இனிவரும் தேர்தல்களில் கோவை மாவட்டம் தமிழக வெற்றிக் கழகத்தின் அசைக்க முடியாத கோட்டையாக மாறும் என கிணத்துக்கிடவு தொகுதியில் வெற்றிப் பெற்ற தவெக வேட்பாளர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் கிணத்துக்கிடவு தொகுதியில் வெற்றிப் பெற்ற தவெக வேட்பாளர் விக்னேஷ் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது, ஆறு மாதங்களுக்கு முன்பே கோவையில் த.வெ.க சார்பில் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டன என்றும் அப்போது தேர்தலில் வெற்றி பெற்று, அந்தச் சான்றிதழுடன் தான்  சந்திப்பேன்’ எனத் தவெக தலைவர் விஜயிடம் உறுதியளித்திருந்ததாகவும் தெரிவித்தார்.

இனிவரும் உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் கோவை மாவட்டம் தமிழக வெற்றிக் கழகத்தின் அசைக்க முடியாத கோட்டையாக மாறும் என்றும் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *