கேரளாவில் மழை வெள்ளம் – முதல்வர் சதீசன் அதிர்ச்சித் தகவல்!

Advertisements

கேரளத்தில் மழை வெள்ளத்தாலும் நிலச்சரிவாலும் 1882 எக்டேரில் பயிர்கள் சேதமடைந்துள்ளதாகவும், மொத்தம் 67 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் சதீசன் தெரிவித்துள்ளார்.

கேரளத்தில் கடந்த வாரத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்தால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கும், மலைப்பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்நிலையில் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் சதீசன், மாநிலத்தில் 462 நிவாரண முகாம்கள் செயல்படுவதாகவும் அவற்றில் 27 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மழை வெள்ளம் நிலச்சரிவு ஆகியவற்றால் 26 பேர் உயிரிழந்ததாகவும், 11 பேர் காயமடைந்துள்ளதாகவும், 4 பேரைக் காணவில்லை என்றும் குறிப்பிட்டார்.

1882 எக்டேர் நிலப்பரப்பில் பயிர்கள் சேதமடைந்துள்ளதாகவும், 23 ஆயிரம் உழவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், முதற்கட்ட மதிப்பீட்டில் 67 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளதாகவும் கூறினார்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *