
அமெரிக்கக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால், ஈரான் பூமியிலிருந்து துடைத்தெறியப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப்எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானில் இருந்து ஏவப்பட்ட 15 ஏவுகணைகள் மற்றும் 4 டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அமீரக அரசு, இதற்குப் பதிலடி கொடுக்கும் உரிமை தங்களுக்கு இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து, அமெரிக்கப் போர்க்கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்திக்குள் நுழைவதை ஈரான் கடற்படை தடுக்க முற்பட்டபோது அதை அமெரிக்க புறக்கணித்தது.
இதையடுத்து, ஜாஸ்க் தீவுக்கு அருகே ஒரு அமெரிக்கப் போர்க் கப்பலை நோக்கி இரண்டு ஏவுகணைகள் ஏவப்பட்டதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது. இதன் பின்னர், ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கடந்து செல்ல முயற்சிக்க வேண்டாம் என்று ஈரானின் ஆயுதப் படைகள் பல வெளிநாட்டுக் கப்பல்களை எச்சரித்திருந்தாகவும் ஈரான் கூறியுள்ளது.
இதற்கு அமெரிக்க தரப்பில் மறுப்பு தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது, அமெரிக்கக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால், ஈரான் பூமியிலிருந்து துடைத்தெறியப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.




