டுரூஸ் நகருக்குச் சென்ற அரசு படையினர் மீது குண்டு வீசித் தாக்குதல்

சிரியாவில் குழு மோதல் நடைபெற்ற டுரூஸ் நகருக்குச் சென்ற அரசு படையினர் மீது குண்டு வீசித் தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

சிரியாவின் டுரூஸ் நகரில் ஞாயிறன்று டுரூஸ் தீவிரவாதிகளுக்கும் பெடூயின் பழங்குடியினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இரு பிரிவிலும் மொத்தம் 200 பேர் கொல்லப்பட்டதாக மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வன்முறையை ஒடுக்குவதற்காக டுரூஸ் நகரை நோக்கி முன்னேறிய சிரிய அரசுப் படைகள் மீது இஸ்ரேல் விமானப்படை டிரோன்கள், ஏவுகணைகள் மூலம் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்தத் தகவலை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் இந்தத் தாக்குதலுக்கு சிரிய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *