தோல்வி முதுகில் சுமக்கும் பாரம்…. வெற்றி தலையில் சுமக்கும் பாரம்….. கவிஞர் வைரமுத்து வாழ்த்து….!

Advertisements

உலகத் தமிழர்கள் உங்களுடைய வெற்றியை உற்றுப் பார்க்கிறார்கள் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

கவிஞர் வைரமுத்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

அதில், கலை உலகின் சகபயணி என்ற முறையில் வாழ்த்துவதாகத் தெரிவித்தார். உலகத் தமிழர்கள் உங்களுடைய வெற்றியை உற்றுப் பார்க்கிறார்கள் என்றார்.

தோல்வி என்பது முதுகில் சுமக்கும் பாரம் என்றும் வெற்றி என்பது தலையில் சுமக்கும் பாரம் என்றும் குறிப்பிட்டார்.

மக்கள் உங்களுக்கு வாக்களிக்கும் முன்பே, நீங்கள் மக்களுக்கு வாக்குறுதி அளித்துவிட்டீர்கள்; அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்தான் உங்கள் ஆட்சியின் மாட்சி அடங்கியுள்ளது என்று அவர் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *