தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், நாளை முதல்கட்டமாக ஆலோசனை..!

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், நாளை முதல்கட்டமாக அக்கட்சியின் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளார்.

இதில், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, நாகை உள்ளிட்ட மாவட்ட செயலாளர்கள் நாளை சென்னையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

இதில், நிர்வாகிகள் நியமனம், கட்சியின் வளர்ச்சி மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான அறிவுரைகள் உள்ளிட்டவை குறித்து மாவட்ட செயலாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்களை வழங்க இருக்கிறார்.

அதே போல் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் முக்கிய ஆலோசனைகள் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *