லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடர்ந்து 5வது நாளாக போராட்டங்கள் தொடர்வதால்,ஊரடங்கு உத்தரவு.!

Advertisements

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடர்ந்து 5வது நாளாக போராட்டங்கள் தொடர்வதால், வன்முறையை கட்டுப்படுத்த அதிபர் டிரம்ப் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், சட்டவிரோதமாக குடியேறிய 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்ககோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்   5வது நாளாக போராட்டங்கள் தொடர்வதால், வன்முறையை கட்டுப்படுத்த அதிபர் டிரம்ப் ஊரடங்கு உத்தரவை பிறபித்துள்ளார். மேலும், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை கும்பல்கள் ஆக்கிரமித்துள்ளதாகவும், வெளிநாட்டு எதிரியின் படையெடுப்பிலிருந்து நகரை மீட்டு அழகான நகரமாக மாற்ற உள்ளதாக தெரிவித்தார்.

கலவரம் தொடர்ந்து நடைபெற்று வருவதால் லாஸ் ஏஞ்சல்ஸில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *