வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள மைதானத்தில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி, முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 295 ரன்கள் எடுத்தது. இதில், அதிகபட்சமாக ஜஸ்டின் கிரேவிஸ் 101 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து, 296 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 41 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 300 ரன்கள் எடுத்தது. இதில், மிகவும் சிறப்பாக விளையாடிய கேப்டன் சுப்மன் கில் 110 ரன்களும், விராட் கோலி 139 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர். இதன்மூலம், இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.


