ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதலமைச்சர் விஜய் ஊக்கத்தொகை வழங்கி சிறப்பித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய், காமன்வெல்த் ஆண்களுக்கான 65 கிலோ எடைப் பிரிவில் பழுதூக்குதல் போட்டியில், வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துபாண்டியனுக்கு ஊக்கத்தொகையாக 30 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கிப் பாராட்டினார்.
தொடர்ந்து, காமன்வெல்த் ஆண்களுக்கான ‘டிரிபிள் ஜம்ப்’ பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிரவீன் சித்ரவேலுக்கு 30 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அவரது தந்தை சித்ரவேலிடம் வழங்கினார்.
காமன்வெல்த் ஆண்களுக்கான ‘டிரிபிள் ஜம்ப்’ பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற செல்வா பிரபுக்கு, உயரிய ஊக்கத்தொகையாக 20 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கிப் பாராட்டினார்.


