
புதுமைப் பெண்களடி பூமிக்கே கண்களடி..
ஆணுக்கிங்கே பெண்கள் இளைப்பில்லை காணென்று கும்மியடி..பெண்மை போற்றுவதற்காகப் பாரதியாரால் பாடப்பட்டவை. பூமி, நதி, நிலா என இயற்கையை நாம் பெண்களாக நினைத்து கொண்டாடுகிறோம். ஆனால் என்ன பயன் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகிக் கொண்டே வருகிறது. பெண்களைப் போகப் பொருளாக மட்டுமே பார்க்கிறார்கள். விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. ஆனால் அஞ்ஞானம் தான் மிஞ்சியுள்ளது.
சமீபத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகள் உலகில் மிகவும் பரவலாகவும் உள்ள வேதனையான செய்தி. இது அப்பட்டமான மனித உரிமை மீறல். உலகளவில், மதிப்பிடப்பட்ட 736 மில்லியன் பெண்கள் – கிட்டத்தட்ட மூன்றில் ஒருவர் – உடல் மற்றும் அல்லது பாலியல் நெருக்கமான நண்பர்கள் வன்முறை, அறிமுகம் அல்லாத நபர்களால் பாலியல் வன்முறைக்குப் பாதிக்கப்படுகிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.
பணியிடம், வசிக்கும் பகுதிகள், சமூகவலை தளங்கள் இடங்கள் என அனைத்து இடங்களிலும் இந்தக் கொடுமை நாள்தோறும் நடந்து கொண்டு தான் உள்ளது. கொரோனா நோய்த்தொற்று காலத்தில் அதிகரித்தது. சர்வதேச மனித உரிமைகள் தினத்தை டிசம்பர்-10 அதனைத் தொடர்ந்து யு.என்.ஐ.டி.இ நவம்பர் 25 முதல் ஆரம்ப்த்து டிசம்பர் 10 வரை கடைபிடிக்கப்படுகிறது. அதனால் நவம்பர்- 25 சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் அனுசரிக்கப்படுகிறது.
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையைத் தடுப்பதற்காகவே 2023-ல் பிரச்சாரம் செய்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டு வருவதில் பொது மக்கள் கண்டிப்பாக போராட வேண்டும். சர்வ தேச அளவில் உலக நாடுகள் பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுத்து கடுமையான தண்டனைகள் கொண்டு வந்துள்ளது. பெண்கள் முன்னேற்றத்திற்காகவும் பாதுகாப்பிற்காகவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அதே சமயம் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகள் (வி.ஏ.டபிள்யூ.ஜி) செய்வோருக்கு போக்சோ போன்ற பிணையில் வர முடியாத பிரிவுகளின் கீழ் கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது.
வார்த்தைகளால் கூட பாலியல் சீண்டல், சிறுசிறு தொடுதல், பாலியல் தூண்டுதல், பலாத்காரம் உளவியல் ரீதியாக பாலியல் வன்முறை போன்றவற்றை அரங்கேறி வருகிறது.
பாலியல் வன்முறை மற்றும் துன்புறுத்தல் ,கற்பழிப்பு, கட்டாய பாலியல் நடவடிக்கைகள், தேவையற்ற பாலியல் முன்னேற்றங்கள், குழந்தை பாலியல் துஷ்பிரயோகம், கட்டாய திருமணம், பொது இடங்களில் உரசல், மிரட்டல், ஆசை வார்த்தைகளைக் கூறி ஏமாற்றுவது , திருமணம் செய்து கொண்டு கொலை செய்வது அனைத்துமே பெண்களுக்கு எதிரான வன்முறையானதாகக் கருதப்படும்.
ஆரம்பகால கல்வி குறைபாடுகள் உலகளாவிய பள்ளிக்கல்வி மற்றும் பெண்களுக்கான கல்வி உரிமைக்கான முதன்மை தடையாக மட்டுமல்ல; உயர்கல்விக்கான அணுகலைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழிலாளர் சந்தையில் பெண்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் அவர்கள்தான் காரணம்.
பாலின அடிப்படையிலான வன்முறை யாருக்கு வேண்டுமானாலும், எங்கும், சில பெண்களுக்கு நிகழலாம்.



