“ஈரான் சரணடைந்தால் போர் முடியும்” – டிரம்ப் அதிரடி!

ஈரான் சரணடைந்த உடன், போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கச்சா எண்ணெய் விலை அதலபாளத்திற்கு சரிய போவதாகத் தெரிவித்தார். ஈரான் சரணடைந்த உடன், போர் விரைவில் முடிவுக்கு வரும் என்றும் கச்சா எண்ணெய் விலை சரிய துவங்கும் என்றும் கூறினார். ஜோ பைடனின் நிர்வாக காலத்தை விட எரிபொருள் செலவுகள் ஏற்கனவே குறைவாக இருப்பதாகத் தெரிவித்தார்.
குறிப்பாக தனது நிர்வாகத்தின் கீழ், எல்லா பொருட்களின் விலைகளும் குறைந்து வருவதாகக் கூறினார். நாட்டின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது வறுமை குறைவாக உள்ளதாகவும், தனிநபர் வருமானத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் மக்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிக பணம் சம்பாதிப்பதாகக் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *