பொள்ளாச்சி வழக்கில் எடப்பாடி பழனிசாமியை ரவுண்டு கட்டிய திமுக! சாகும்வரை சிறை தண்டனை.!

Advertisements

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேர் நேற்று கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி நந்தினி தேவி முன்னிலையில் சாட்சிகளின் விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகி உள்ளது.தமிழகத்தில் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோ எடுத்து, பின்னர் அவற்றை பயன்படுத்தி பணம் மற்றும் பாலியல் பலன்களைப் பெறும் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக கடந்த 2019-ம் ஆண்டு புகார் எழுந்தது.

இந்த வழக்கில், 9 பேர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு சிபிஐ விசாரணையின் கீழ் பல நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று காலை பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகள் 9 பேர் நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டனர். முன்னெச்சரிக்கை காரணமாக நீதிமன்ற வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.தமிழ்நாட்டையே உலுக்கிய பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என உறுதி செய்து நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பை வாசித்தார். இது தொடர்பான தண்டனை விவரங்கள் மதியம் 12 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் , பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிபிஐ கேடயத்தை தூக்கி புனிதர் வேடம் தரிக்க முயல்கிறார் எடப்பாடி பழனிசாமி என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார்.இந்நிலையில் “நடுநிலையோடு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டேன். அதற்கான நீதியே இன்று கிடைத்துள்ளது.” என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியின் கருத்தை திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பை வரவேற்று அறிக்கை விட்டிருக்கும் அதிமுக, தன்னை தூயவன் போலக் காட்ட முயல்கிறது.

பிறகு என்ன நினைத்தார்களோ எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திருவாய் மலர்ந்திருக்கிறார். ‘நடுநிலையோடு சிபிஐ. விசாரணைக்கு உத்தரவிட்டேன். அதற்கான நீதியே இன்று கிடைத்துள்ளது’ என சொல்லியிருக்கிறார். அதிமுகவினர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என தெரிந்ததுமே பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை அன்றைக்கு ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிசாமி அரசு மூடி மறைக்க முயன்றது.”பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐ-க்கு மாற்றுவதாக அரசு அறிவித்த பிறகும் சிபிசிஐடி விசாரிப்பது ஏன்?” என்று சென்னை உயர் நீதிமன்றம் 2019 மார்ச் 29 ஆம் தேதி கேள்வி எழுப்பியது. உடனே தமிழக அரசு வழக்கறிஞர் “வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்கும் பணி நடக்கிறது” எனச் சமாளித்தார்.

புகார் அளித்த மாணவியின் சகோதரர் பூபாலனை குற்றவாளிகள் தரப்பு தாக்கியது. வழக்கை திரும்பப்பெற சொல்லி மிரட்டியது. பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களை எல்லாம் போட்டு அரசாணை வெளியிட்டார்கள்.இவையெல்லாம் பாதிக்கப்பட்ட பெண்களின் தரப்பை அச்சுறுத்த அன்றைக்கு இருந்த பழனிசாமி அரசு மேற்கொண்ட அஸ்திரங்கள். பொள்ளாச்சி பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்கில், ‘வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்து மாநில அரசு வெளியிட்டுள்ள அரசாணையைத் திரும்பப் பெற்று, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் மற்றும் விவரங்கள் குறிப்பிடாத புதிய அரசாணையை வெளியிட வேண்டும். அதிமுக எவ்வளவு அரசியல் கேவலங்களை அரங்கேற்றினாலும் இறுதியில் உண்மை மட்டுமே வெல்லும்” எனத் தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *