
புதுடில்லி:
பொதுக்கூட்டங்களில் பொய்களை ராகுல் பரப்புகிறார். அவர்மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பா.ஜ.க., வலியுறுத்தி உள்ளது.
மஹாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்டில் தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தல் பிரசாரத்தின்போது, பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மாறி, மாறிக் குற்றச்சாட்டுகளைப் பரப்பி வருகின்றன. மும்பையில் நடந்த பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் கூறிய பொய்யான குற்றச்சாட்டுகளை எதிர்த்து, பா.ஜ.க., தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.
மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தலைமையிலான பா.ஜ., குழுவினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர். புகார் மனுவில், ராகுல் காங்கிரஸ் எம்.பி. பொய்யான குற்றச்சாட்டுகளைப் பரப்புவதாகவும், பா.ஜ., அரசியலமைப்பு சட்டத்தை நசுக்க விரும்புகிறது எனக் கூறியதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
பா.ஜ.க., வின் கொள்கைகள் குறித்து தவறாகப் பேசும், எதிர்க்கட்சி தலைவர் ராகுல் மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் பிரசாரத்தில் பொய்களைப் பரப்புவதை கண்டிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.


