தவெகவின் மூன்றாம் ஆண்டு தொடக்கம்.!

Advertisements

2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அனைத்து மக்களின் அமோக ஆதரவுடன் ஆட்சி பீடத்தைக் கைக்கொள்ளுவோம் என தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது சமூகவலைத் தளப்பதிவில் தவெகவின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவை ஒட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதில், தமிழக வெற்றிக் கழகத்தின் மகிழ்ச்சிகரமான மூன்றாம் ஆண்டு, இன்று தொடங்குகிறது என்றும் இரண்டு ஆண்டுகளை இயல்பாகவும், இயல்பைத் தாண்டியும் நிறைவு செய்து, அரசியல் பெரும்பயணம் நீள்கிறது என்றும் தெரிவித்தார்.

சலனங்களைப் புறந்தள்ளி, சமநிலை தவறாத, அளக்கவியலாத ஆழ்கடல் த.வெ.க என்று பெருமிதத்துடன் கூறினார். 2026 ஆம் ஆணடு சட்டமன்றத் தேர்தல் களம், அனைத்து மக்களின் அமோக ஆதரவுடன், தீர்க்கமுடன் ஒற்றுமையாகக் களமாடி, ஆட்சி பீடத்தைக் கைக்கொள்ளுவோம் என்றார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *