
அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் திமுக தலைவர் தவறான பிரச்சாரத்தைச் செய்து வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
தைப் பொங்கலுக்கு ஏழைகள் மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டும் என்பதற்காக, ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 2500 பணத்துடன், பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. ஆனால் திமுகவில் ஒழுகும் வெல்லத்தை கொடுத்தார்கள். பொங்கல் தொகுப்பில் ஊழல் செய்தவர்கள் தான் திமுக. திமுக தேர்தல் நேரத்தில் 520 வாக்குறுதிகள் வழங்கப்பட்டது. இதில் 100 சதவீதம் நிறைவேற்றியதாக முதல்வர் பச்சை பொய் பேசி வருகிறார். தேர்தல் வாக்குறுதியில் சொல்லியதை நிறைவேற்றவில்லை. ஆட்சிக்கு வந்தால், அனைத்து பெண்களுக்கு மாதம் 1000 வழங்கப்படும் என்று சொன்னார்கள். ஆனால் இன்று தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே கொடுப்பேன் என்று சொல்கிறார்கள். அதுவும் முழுமையாகச் சேரவில்லை.
திமுக ஆட்சியானது குடும்ப ஆட்சி, முன்பு கலைஞர் முதலமைச்சர், பிறகு ஸ்டாலின் வந்தார். தற்போது உதயநிதியை முதலமைச்சராக்க போகிறார்கள். இது நடக்காது. திமுகவில் முன்னாள் அமைச்சர்கள், முன்னோடிகளுக்கு வாய்ப்பில்லை. இதுதான் குடும்ப ஆட்சி. அடுத்த தேர்தல் எப்பொழுது வந்தாலும் அதிமுக தான் வெற்றி பெறும் எனத் தெரிவித்தார்.
பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக பிரிந்தது பொறுத்துக் கொள்ள முடியாமல், ஏதேதோ பேசிக்கொண்டு வருகிறார்கள். அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் திமுக தலைவர் தவறான பிரச்சாரத்தைச் செய்து வருகிறார். ஏனென்றால் சிறுபான்மையினர் வாக்குகளைத் திமுக ஏமாற்றி வாங்கி வந்தது. தற்போது நாம் அதை வாங்கி விடுவோம் என்ற அச்சம் திமுகவினருக்கு வந்துவிட்டது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.



