தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை முற்றிலும் புறக்கணித்த பட்ஜெட்டாகவே உள்ளது என தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தனது சமூக வலைத்தளத்தில் மத்திய அரசின் பட்ஜெட் குறித்து செய்தி வெளியிட்டுள்ளார். இதில், மத்திய பட்ஜெட் தமிழ்நாட்டு மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது என்றார்.
மாநிலத்தின் அடிப்படை வளர்ச்சிக்கான தேவைகள், வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், தொழில்துறை முதலீடு போன்ற முக்கிய துறைகளுக்கு எந்தத் தெளிவான அறிவிப்புகளும் இடம்பெறவில்லை என்றும் கூறினார்.
இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் தமிழ்நாட்டிற்கு உரிய பங்கீடு வழங்கப்படவில்லை என்றும் இது தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை முற்றிலும் புறக்கணித்த பட்ஜெட்டாகவே உள்ளது என்றும் குற்றம் சாட்டினார்.



