பிக்பாஸ் 8: வைல்ட் கார்ட் எண்ட்ரி ரெடி!

பிக்பாஸ்8 நிகழ்ச்சியில் அடுத்த வைல்ட் கார்டு எண்ட்ரி பற்றிய தகவல் கசிந்துள்ளது.

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. ஏழு சீசன்களை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். சினிமா, அரசியல் என்று அடுத்தடுத்து நேரமில்லாததால் அவர் நிகழ்ச்சியிலிருந்து ஒதுங்கி விட இந்தச் சீசனை நடிகர் விஜய்சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்தச் சீசனின் போட்டியாளர்களும் தொகுப்பாளரும் மந்தமாக இருப்பதாகவே பிக்பாஸ் ரசிகர்கள் பலரும் சொல்லி வருகின்றனர். இதுமட்டுமல்லாது, நேற்றைய சீசனில் பிக்பாஸூமே போட்டியாளர்களிடம் நீங்கள் இன்னும் இந்த வீட்டில் வாழ ஆரம்பிக்கவில்லையெனக் கூறினார்.

நிகழ்ச்சியைச் சூடுபிடிக்க வைக்க எந்தச் சீசனிலும் இல்லாத அளவுக்கு முதல் முறையாக 6 வைல்ட் கார்டு போட்டியாளர்களைப் பிக்பாஸ் உள்ளே அனுப்பினார். ஆனாலும், அவர்களும் நிகழ்ச்சியில் பெரிதாக எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. இதனால், அடுத்த வைல்ட் கார்டு போட்டியாளரைப் பிக்பாஸ் உள்ளே அனுப்ப முடிவு செய்திருக்கிறார்.

அந்த வகையில் நிகழ்ச்சியில் ஏற்கனவே வெளியேறிய போட்டியளார்களே மீண்டும் வைல்ட் கார்டு எண்ட்ரியில் உள்ளே வர இருக்கிறார்கள். நிகழ்ச்சியின் ஐம்பதாவது நாளில் ரவீந்தர், தர்ஷா குப்தா, அர்னவ் ஆகியோரில் ஒருவர் உள்ளே வர வாய்ப்பிருப்பதாகத் தகவல் கசிந்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *