
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அது ஒட்டுமொத்த மத்திய கிழக்குப் பிராந்தியத்திலும் ஒரு பெரும் போராக உருவெடுக்கும் என ஈரானின் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி கமேனி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
ஈரானில் அண்மையில் நடைபெற்ற மக்கள் போராட்டங்களை அந்நாட்டு அரசு ஒடுக்கியதைத் தொடா்ந்து, அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அந்நாட்டுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்கக்கூடும் என்று கூறினார். மத்திய கிழக்குக் கடல் பகுதியில் அமெரிக்காவின் போா்க்கப்பல்கள் தயாா் நிலையில் உள்ளன’ என்றும் எச்சரித்திருந்தார்.
இந்தச் சூழலில், ஈரான் உச்சத் தலைவர் அயத்துல்லா அலிகமேனி செய்தியாளர்களிடம் பேசியபோது, அமெரிக்கா போரைத் தொடங்கினால், அது இம்முறை ஒரு பிராந்தியப் போராக மாறும் என்று எச்சரிக்கை விடுத்தார். தங்கள் நாட்டின் மீது யாராவது தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்கப்படும் என்றும் கூறினார்.
இந்தப் போராட்டத்தைப் பயன்படுத்தி, வெளிநாட்டுச் சக்திகள் ஈரானின் முக்கிய நிா்வாக அமைப்புகளைச் சிதைக்க முயன்றதாகவும், அந்த முயற்சி தற்போது முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தார்.




