2026-ல் தமிழகத்துக்கு சுதந்திரம் கிடைத்தது – அமைச்சர் ஆனந்த்!

மதுராந்தகம் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் ஆனந்த், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு ஆதரவு திரட்டினார்.

 

அப்போது பேசிய அவர், “மக்கள் எந்தப் பிரச்சினையை கூறினாலும், அதை சிரித்த முகத்துடன் மரகதம் குமரவேல் தீர்த்து வைப்பார்” என்று தெரிவித்தார். மேலும், பிரசாரத்தின்போது தன்னை சந்தித்த பெண் ஒருவர், “1947-ல் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது; 2026-ல் தான் தமிழகத்துக்கு சுதந்திரம் கிடைத்தது” என்று கூறியதாகவும், அதற்கு காரணம் தங்கள் தலைவர் விஜய் என அந்தப் பெண் தெரிவித்ததாகவும் அமைச்சர் ஆனந்த் கூறினார்.

 

தொடர்ந்து பேசிய அவர், தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை சந்திப்பவர் வேட்பாளர் அல்ல என்றும், மக்கள் எப்போது அழைத்தாலும் அவர்களை சந்தித்து பணியாற்றுபவராக இருக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும், “பதவி என்பது அதிகாரம் அல்ல; மக்களுக்கு சேவை செய்யும் பொறுப்பு” என தெரிவித்தார். மதுராந்தகம் தொகுதிக்கு புதிய நம்பிக்கை தேவைப்படுவதாகவும், அந்த நம்பிக்கையின் பெயர் மரகதம் குமரவேல் என்றும் குறிப்பிட்ட அமைச்சர் ஆனந்த், மதுராந்தகம் தொகுதியை தவெகவின் கோட்டையாக மாற்ற வேண்டும் என கட்சியினருக்கு அழைப்பு விடுத்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *