தளபதியை கோட்டைக்கு அனுப்பும் வரை ஓயமாட்டேன்..!

தன் உடலில் ஒடும் ஒவ்வொரு துளி ரத்தமும் தளபதியை கோட்டைக்கு அனுப்பும் வரை ஓயப்போவதில்லை என தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில்  தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், மாவட்ட செயலாளர் பிரதீப்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில், முன்னாள் அமைச்சர்  செங்கோட்டையன் பேசியபோது, தான் இந்த கட்சிக்கு வரவில்லை என்றால் தன்னை குப்பை தொட்டியில் தூக்கி போட்டிருப்பார்கள் என்றும் அதிலிருந்து தான் தப்பித்து இங்கு வந்து இருக்கிறேன் என்றும் தெரிவித்தார்.

சாதாரண உறுப்பினராக கூட இல்லாமல் தூக்கி ஏறியப்பட்ட தன்னை தூக்கி விட்டவர் தளபதி என்றும் தன் உடலில் ஒடும் ஒவ்வொரு துளி ரத்தமும் தளபதியை கோட்டைக்கு அனுப்பும் வரை ஓயப்போவதில்லை என்றும் கூறினார். இரண்டு மணி நேரத்தில் பத்தாயிரம் விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டுள்ளது என்றும்  தற்போது வரை 1 கோடியே 28 லட்சம் பேர் தவெகவில் உறுப்பினர்களாக உள்ளனர் என்றும் தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *