திமுக கொரோனா..தவெக உருமாறிய கொரோனா- அதிமுக MP இன்பதுரை விமர்சனம்.!

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுத் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும் திமுக மற்றும் புதிதாகக் களமிறங்கியுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றித் கழகம் ஆகிய இரு கட்சிகளையும் ஒரே நேர்க்கோட்டில் வைத்து அதிமுக கடுமையாகத் தாக்கிப் பேசியுள்ளது.

செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் இன்பதுரை, “திமுக என்பது ஒரு கொரோனா என்றால், விஜய் தலைமையிலான தவெக என்பது உருமாறிய கொரோனா (Mutated Virus). வரவிருக்கும் தேர்தலில் அதிமுகவின் மகத்தான வெற்றியைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காகவே, திமுகவால் பின்னணியில் இருந்து உருவாக்கப்பட்ட கட்சிதான் தவெக. சுருக்கமாகச் சொன்னால் திமுகவின் B-Team ஆகத்தான் தவெக செயல்பட்டு வருகிறது” என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், மக்களின் கவனத்தைத் திசைதிருப்பி, அதிமுகவிற்குச் செல்ல வேண்டிய வாக்குகளைப் பிரிப்பதற்காகவே இந்த அரசியல் நாடகம் அரங்கேற்றப்பட்டு வருகிறது என்றும் சாடினார்.

விஜய்யின் தவெக கட்சி, திமுகவின் B-Team என்று அதிமுக தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வரும் நிலையில், அதிமுக எம்.பி. இன்பதுரையின் இந்த ‘கொரோனா’ ஒப்பீடு அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய காரசார விவாதத்தையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *