CM விஜய் தொடைநடுங்கி, கையாலாகாதவர்..பொளந்துகட்டிய பரந்தாமன்.!

மதுராந்தகம் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று மதுராந்தகத்தில் தீவிர சூறாவளி மேற்கொண்டார். சுமார் 27 நிமிடங்கள் விஜய் உரையாற்றிய நிலையில், அவரது பேச்சுக்கு திமுக வேட்பாளர் பரந்தாமன் விஜய் வசனத்தைபோல தனது காட்டத்தை ஒரு காட்டு காட்டியிருக்கிறார்.  அவர் அப்படி என்னத்த காட்டனாரு என்பதை நம்  ஜெம் தொலைக்காட்சி மூலம் பார்க்கலாம்

முதல்வர் விஜய் 27 நிமிடம் மதுராந்தகம் பிரச்சாரத்தில் உரையாற்றியிருக்கிறார். 7 வினாடியில் தன்னுடைய ஆட்சியில் செய்த சாதனையை கூட சொல்ல வக்கில்லை.எதற்கெடுத்தாலும் திமுக, திமுக என்று புலம்பித் தள்ளியிருக்கிறார்.

நான் ஒரு முதலமைச்சராக இங்கு வரவில்லை” என்கிறார். அதற்கு, இங்கு இல்லை, நீங்கள் எங்கு போனாலும் நீங்கள் தமிழ்நாட்டு முதலமைச்சர்தான்.சட்டைதான் புதுசு, டயலாக் எல்லாம் பழசு.

எந்தவிதமான ஆக்கப்பூர்வமான கருத்துகளையும் முதலமைச்சர் பேசவில்லை.“என் குடும்பத்தைப் பற்றி தவறாக பேசுனிங்க, எல்லாத்தையும் நான் மன்னிச்சு விட்டுறேன்” என பெருந்தன்மையாக பேசுகிறார். ஏன் பேசுனது பாஜக தலைவர்.

திமுகதான் பாஜக, பாஜகதான் திமுக என்று சொல்கிறார். என்றைக்காவது முதலமைச்சர் பாஜகவை எதிர்த்து அறிக்கை விட்டிருக்கிறாரா?
மடைமாற்று அரசியலைத்தான் இன்று சென்று செய்து கொண்டிருக்கிறார்.

நேற்று வண்டலூரில் 10 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்திருக்கிறது. அதை பற்றி பேச துப்பில்லை. ஆனால், காவல்துறையை விட்டு பாம்பு கடித்ததாக விஷயத்தை மாற்ற சொல்கிறீர்கள். பெற்றவர்களை காவல்துறையை விட்டு மிரட்டியவர்கள் தானே நீங்கள்?

ரூட் மாஃபியா மூலம் நீங்கள் ஆட்சிக்கு வந்தீர்கள். இதற்கு பயந்துகொண்டு வண்டலூர் பக்கம் வராமல், ரூட்டை மாற்றித்தான் நீங்கள் மதுராந்தகம் பிரச்சாரத்திற்கு வந்தீர்கள்.

ஆட்சிக்கு வந்து 5 மாதம் ஆகிவிட்டது. எந்த சாதனையை சொல்லி நீங்கள் ஓட்டு கேட்பீங்க?திராவிடத்தின் திட்டத்தை வைத்துத்தான் இன்றுவரைக்கும் நீங்கள் வண்டி ஓட்டிக்கொண்டிருக்கிறீர்கள்.ஊழல் பற்றி பேசும் விஜய், பக்கத்தில் மரகதம் குமரவேலை வைத்துக்கொண்டுதான் பேசுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

ஊழலை ஒழித்துவிட்டேன் என்று சொல்லும் விஜய், இந்த ஆட்சியிலும் ஊழல்தான் நடக்கிறது என்பதை மறந்து போகிறார். போதிய பெரும்பான்மை இல்லாததால் வேறுகட்சி எம்எல்ஏவை விலைக்கு வாங்கிவிட்டீர்கள். அப்புறம் எப்படி நீங்கள் தூய சக்தி என்று சொல்ல முடியும்?

இன்றைக்கு இருக்கிற அரசியல் கட்சிகளில் விஜய் கட்சியை விட வேறு எந்த தீய சக்தி கட்சியும் இல்லை.படத்தில் நடிக்கும் ஹீரோ மாதிரிதான் நீங்கள். 100 நாள் வேலை கேள்விக்குறி. விலைவாசி எகிறிவிட்டது. மதுராந்தகம் மக்கள் வேதனை. என்ன நடவடிக்கை எடுத்து கிழித்தீர்கள்?

குறை சொல்றதுதான் உங்க வேலையா இருக்கு. சும்மா வந்தவுடனே அடித்து விடக்கூடாது. உங்க கட்சிக்காரர்கள்தான் அதிகமாக பாலியல் குற்றங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

உங்கள் வீட்டு பெண்களுக்கு பாதுகாப்பில்லை. அதை விட்டுவிட்டு தமிழ்நாட்டு பெண்களுக்கு எந்த தார்மீக அடிப்படையில் உரிமை இருக்கிறது? எழுதி கொடுத்தால் அப்படியே வந்து வாந்தி எடுக்கக்கூடாது.

நீங்க எதையும் செய்யாமல் திமுக மேல் பழி சுமத்துவது உங்களுடைய கையாலாகத்தனத்தை காட்டுகிறது. போதிய நிர்வாகத் திறன் இல்லை, போதிய அறிவு இல்லை. அதிமுக உறுப்பினர்களை திருடிய நீங்கள் ஊழல்வாதி, ஷோபா மாடல் அரசு என்று விமர்சித்தார்.

ஆட்சி பெயிலர், ஆட்சியோடு உங்க கூட்டணியும் பெயிலர் ஆகிவிட்டது. மதுராந்தகம் தொகுதியில் திமுக வெற்றி பெற்றால் ஆட்சி மாற்றம் ஏற்படும். தறிகெட்டுப்போன இந்த அரசுக்கு ஒரு மூக்கணாங்கயிறு இந்த மக்கள் போடுவார்கள் என்பது உண்மைதான்.

இன்னைக்கு உங்க கூட்டணியில் ஒற்றுமை இல்லை. நீங்க உங்க முதலமைச்சர் பொறுப்பை இழந்துவிட்டீர்கள். என்னைக்கு ஜனநாயகன் படம் வந்து ஓடாமல் போச்சோ, அப்போதே ஜனநாயகம் செத்துப்போச்சு. ஆகையால், நீங்க தோற்றுப்போன ஹீரோ, தோற்றுப்போன முதல்வர், தோற்றுப்போன அரசு நடத்துறீங்க.

ஊரான் வீட்டு நெய்யை ஸ்வீட் செய்தாதீங்க. அப்போ மரகதம் யாரு வீட்டு நெய்யை வைத்து இப்போ ஸ்வீட் செய்றீங்க? உங்களுக்கு அருகதை கிடையாது. 10 லட்சம் கோடி பாட்டா பாடுனீங்க. கடன் வாங்காமல் நடத்துங்க, பார்ப்போம்.

பிஜேபி, தவெக பற்றி விமர்சனம் செய்தாலே பாஜகவினரை கைது செய்ய வேண்டும் என்றால், விஜய்க்கு தொடை நடுங்குது. அதுதான், நைஸாக தப்பிக்கப் பார்க்கிறார். ஸ்டாலினை விமர்சிப்பதற்கு உங்களுக்கு தகுதி, தராதரம் கிடையாது. அவருடைய தியாகத்துக்கு முன்னாடி விஜய் ஒரு ஆளே இல்லை.

விஜய் பேசுவதெல்லாம் விஷத்தோடு பேசுவது. அரசியல் ஆதாயத்திற்காக எல்லாவற்றையும் பேசுகிறார்.
என்று தனது காட்டத்தை மதுராந்தம் தொகுதி திமுக வேட்பாளர் பரந்தாமன் கக்கிய கருத்து குறித்து உங்கள் கருததை நம் ஜெம் கமென்ட்ல் பகிரவும்

இதுபோன்று பரந்தாமன் விஜய்யை கிழித்து தொங்கவிட்ட கதை மட்டுமல்ல மக்களுக்கு எதிராக வெளிவரும் ஒவ்வொரு செய்திகளையும்  உண்மை தன்னையறிந்து ஊடத்தின் வாயிலாக  மக்களுக்கு நீதியை பெற்றுத்தர குரலற்றவர்களின் குரலாக ஒலி எழுப்பும் நம் ஜெம் தொலைக்காட்சியுடன் எப்போதும் இணைப்பில் இருங்கள

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *