Today Rasi Palan: இன்றைய ராசிப்பலன் – 20.01.2024

Advertisements

மேஷம்

 

மனதில் நினைத்த காரியங்கள் யாவும் எண்ணிய விதித்தல் நிறைவேறும். உங்கள் ஆரோக்கியம் மேம்படும். இணையும் மற்றும் வர்த்தகம் தொடர்பான பணிகளில் மேம்படும். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பழைய கடன் பிரச்சனை கட்டுக்குள் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். இன்று நீங்கள் மகாவிஷ்ணுவை வழிபட்டு வந்தால் மகிழ்ச்சி உண்டாகும்.

ரிஷபம்

இன்று நீங்கள் உங்கள் மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். ஆடம்பர பொருட்களின் மீதான ஆசை அதிகரிக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு மேம்படும். செய்யும் முயற்சிக்கு உண்டான வெற்றி கிடைக்கும். தந்தையின் ஆசையை நிறைவேற்றுவீர்கள். மனைவி மக்களிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். என்று நீங்கள் பெருமாளை வணங்கி வர சிறப்பான நாளாக அமையும்.

 

மிதுனம்

 

குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். பொருளாதார வசதிக்கு குறைவு எதுவும் இருக்காது. நீங்கள் செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உணவு சார்ந்த செயல்பாடுகளில் கவனம் தேவை. சமூகத்தில் உங்களுடைய மதிப்பு உயரும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும் சக ஊழியர்கள் நட்பு பாராட்டுவார்கள். இன்று நீங்கள் குருமார்களை வழிபட்டு வந்தால் மகிழ்ச்சியான நாளாக அமையும்.

கடகம்

 

இன்று கணவன் மனைவிக்கிடையே நெருக்கமும் புரிதலும் அதிகரிக்கும். நெருங்கிய உறவினர்களிடம் பக்குவமாக நடந்து கொள்வதின் மூலம் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்த்து விடலாம். திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சக வியாபாரிகளின் பேச்சைக் கேட்டு புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபட வேண்டாம். செயல்பாடுகளில் சிறு மாற்றங்களை செய்வதன் மூலம் நன்மை உண்டாகும். இன்று நீங்கள் வெங்கடேச பெருமாளை வழிபட நன்மைகள் நிறைந்த நாளாக அமையும்.

சிம்மம்

 

இன்று புதிய வேலை தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த நல்ல செய்தி வந்து சேரும். நண்பர்களின் சந்திப்பு ஆதாயம் தருவதாக அமையும். பேச்சில் கவனம் தேவை. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வியாபாரம் தொடங்கு நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளை தொடங்கலாம் தெளிவான பேச்சுக்களின் மூலம் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். இன்று நீங்கள் சிவபெருமானை வழிபட்டு வர சுபிட்சம் நிறைந்த நாளாக அமையும்.

கன்னி

 

சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். வாக்கு வன்மையால் வாடிக்கையாளர்களே கவர்ந்து விடுவீர்கள். புதிய பதவி மட்டுமல்லாமல் புதிய பொறுப்புக்களை ஏற்க நேரிடும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு ஏற்பட்டு  நீங்கும். உடன் பிறந்தவர்களால் நன்மை ஏற்படும். முன்கோபத்தை குறைத்துக் கொண்டு செயல்படுவது நல்லது. வெளியூர் பயணங்களில் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நீங்கள் துர்க்கை அம்மனை வழிபட்டு வந்தால் அனைத்து தடைகளும் அகலும்.

 

துலாம்

 

இன்று நீங்கள் வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே இருந்து கருத்து வேறுபாடுகள் அகலும். வாய்க்கு ருசியான உணவில் அதிக நாட்டம் கொள்வீர்கள். பிள்ளைகளின் கல்வி தொடர்பான விஷயங்களில் ஆலோசித்து முடிவு எடுங்கள். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். உங்கள் சாதுரியமான பேச்சுக்களால் அனைவரையும் கவருவீர்கள். நீண்ட நாட்களாக பாதிப்பை தந்த நோய் அகலும். ரியல் எஸ்டேட் தொழில் ஏற்றமாக காணப்படும். இன்று நீங்கள் குலதெய்வத்தை வழிபட்டு வந்தால் மனதில் நினைத்த எண்ணம் ஈடேறும்.

 

விருச்சிகம்

 

உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணிவாக நடந்து கொண்டால் பொது இடங்களில் உங்கள் செல்வாக்கு உயரும். திருமண முயற்சிகள் சாதகமான பலனை தரும். கமிஷன் வியாபாரங்கள் நல்ல லாபத்தை கொண்டு வரும். நிலம் வாங்கி விற்கும் தொழில் அமோகமாக நடக்கும். யாருக்கும் வாக்கு கொடுக்காதீர்கள் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான வாய்ப்பு ஏற்படும். என்று நீங்கள் சிவபெருமானை வழிபட்டு வந்தால் அனைத்து துன்பங்களும் நீங்கும்.

 

தனுசு

 

உங்கள் மனதில் இருக்கும் எண்ணங்களை செயல் வடிவில் மாற்றுவீர்கள். நினைத்த காரியத்தை நினைத்தபடி முடிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பழைய பாக்கியங்களை அதிரடியாக வசூல் செய்தீர்கள்.. சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும் பொதுநல சேவைகளில் ஈடுபட்டு பலரின் பாராட்டை பெறுவீர்கள். வங்கி சேமிப்பு உயரும் பணவரவு தாராளமாக இருக்கும். பழைய கடன்களை அடைப்பீர்கள் வீடு வாகன தவணைகளை முறையாக செலுத்துவீர்கள். என்று நீங்கள் விநாயகரை வழிபட காரியங்கள் தடையின்றி சாதகமாக முடியும்.

 

மகரம்

 

பணம் தொடர்பான கொடுக்கல் வாங்கலில் நிதானம் வேண்டும். புதுப்புது சிந்தனைகளால் வியாபாரத்தை பெருக்குவீர்கள். துரோகிகளை கூட நண்பர்களாக மாற்றுவீர்கள். சகோதரிகளுக்கு தேவையான உதவிகளை மனம் கோணாமல் செய்வீர்கள். புதிய ஆடை ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். பேச்சில் கனிவு அவசியமாகும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். என்று நீங்கள் பைரவரை வழிபட்டு வந்தால் நன்மைகள் அதிகரிக்கும்.

கும்பம்

 

எந்த காரியத்திலும் துணிச்சலாக செயல்படுவீர்கள் அதில் வெற்றியும் பெறுவீர்கள். செயல்பாடுகளில் புத்தி கூர்மை வெளிப்படும். மனதில் நினைத்த காரியங்கள் ஈடேறும். சுப காரியம் பேச்சுக்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சுப நிகழ்ச்சிகளில் செலவுகள் அதிகரிக்கும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. பொருட்களை பத்திரமாக வைத்திருங்கள் . கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமையும் புரிதலும் அதிகரிக்கும். இன்று நீங்கள் விநாயகப் பெருமானை வணங்கி வர மகிழ்ச்சியான நாளாக அமையும்.

 

மீனம்

 

மீன ராசி அன்பர்களே 

தொழில் முதலீடுகளை அதிகப்படுத்த அரசாங்க கடன் வாங்குவீர்கள். கட்டுமான துறையில் புதிய ஒப்பந்தங்களை பெறுவீர்கள். அவசியமான வேலைகளை தவிர்த்து வெளியூர் பயணங்களை ஒத்தி வைப்பது நல்லது. உணவில் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் இருக்க வேண்டும். கல்லூரி பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், வழக்கறிஞர்கள் மிகப்பெரிய முன்னேற்றம் காண்பார்கள். எதிர்பாராத தேவையான உதவி கிடைக்கும். உடலில் இருந்து எலும்பு பிரச்சனைகள் தீரும். என்று நீங்கள் வெங்கடேச பெருமாளை வணங்கி வர சிறப்பான நாளாக அமையும்.
ஜோதிட ஆன்மீக தகவல்:
ரூபி அல்லது மாணிக்கம் இந்த கல் நவகிரகத்தில் சூரியனுக்கு உரியது இந்த ரத்தினத்தை ஆண்களும் பெண்களும் வலது கையில் மோதிரவர்கள் அணிய வேண்டும் ஜாதகத்தில் சூரியன் நீச்சமாகவோ அல்லது வக்கிரமாகவோ அமைந்தால் இந்த ரத்தினத்தை அணிவது மிகவும் உத்தமம் இதை வெள்ளி அல்லது தங்கத்தில் செய்து அணியலாம் மற்றும் தந்தை வழி உறவினர்கள் அரசாங்க உத்தியோகம் போன்றவற்றுக்கு இந்த ரத்தினத்தை அணிந்தால் சகல காரியத்திலும் வெற்றி பெறலாம் மீண்டும் நாளை சந்திப்போம் நன்றி வணக்கம்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *