Today Rasi Palan: இன்றைய ராசிப்பலன் – 04.04.2024

Advertisements

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு  சாதகமான நாளாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் செயலுக்கான அங்கீகாரம் கிடைக்கும். இதனால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். துணையிடம் நட்பாக நடந்து கொள்வீர்கள். பணவரவு திருப்தியாகக் காணப்படும். இதனால் பணத்தை அதிகமாகச் சேமிப்பீர்கள். ஆரோக்கியத்தில் எந்த விதமான பிரச்சனையும் ஏற்படாது.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு  உங்களுக்கு உகந்த நாளாக இருக்கும். பணிகளைச் செய்யும்போது கவனமாகக் கையாள வேண்டும். துணையிடம் பேசும்போது சண்டை ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் நீங்கள் துணையிடம் பேசும்போது வீண் வாக்குவாதத்தைத் தவிர்க்க வேண்டும். பணவரவு உங்களுக்கு ஏற்ற வகையில் இருக்காது. இதனால் கவலையை அடைவீர்கள். ஆரோக்கியத்தில் கால் வலி பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.

 

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்களுக்கு  வெற்றி காணும் நாளாக இருக்கும்.  முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாளாக இருக்கும்.  உங்களிடம் ஆற்றல் அதிகமாகக் காணப்படும். அதனால் உங்கள் பணிகளைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள்.  உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.  பணவரவு மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். எனவே மகிழ்ச்சி காரணமாக ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

 

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு   உங்களுக்கு ஏற்ற நாளாக இருக்கும். பணியிடத்தில் வெற்றியை அடைவதற்கு கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.துணையை உங்களின் நண்பர்களின் திருமணத்திற்கு அழைத்துச் செல்வீர்கள். இதனால்  இருவருக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். பணவரவு திருப்தியாகக் காணப்படும். இதனால் பணத்தை அதிகமாகச் சேமிப்பீர்கள். ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது.

 

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு  சுறுசுறுப்பாக நடந்து கொள்வீர்கள். பணி சம்மந்தமாக வெளியூர் செல்வீர்கள். இதனால் நன்மைகள் நடக்கும். துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். இதனால் இருவருக்கிடையே நல்லுறவு பராமரிக்கப்படும்.  பணவரவு உங்களுக்கு ஏற்ற வகையில் இருக்கும். இதனால்  கடன் வாங்கியிருப்பதை அடைப்பீர்கள். ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது.

 

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு  உங்களுக்கு ஏற்ற நாளாக இருக்காது. பணியிடத்தில் பணிகள் அதிகமாகக் காணப்படும். அதனால் பணிகளைக் குறித்த நேரத்தில் முடிப்பதற்கு பணிகளைத் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும்.  துணையிடம் உணர்ச்சிவசப்பட்டு பேசுவதை தவிர்க்க வேண்டும்.  வரவுச் செலவு இரண்டும் கலந்து காணப்படும்.  உங்களின் குழந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

 

துலாம்

 

துலாம் ராசிக்காரர்களுக்கு  நீங்கள் எந்தச் செயலையும் சரியாகச் செய்வதற்கு கவனமாகவும், பொறுமையாகவும் செய்ய வேண்டும். பணியிடத்தில் பணிகளைச் சரியான நேரத்தில் முடிப்பதற்கு கஷ்டப்படுவீர்கள். உங்களின் துணையிடம் நல்லுறவை பராமரிக்க அமைதியாக நடந்து கொள்ள வேண்டும். பணவரவு சாதகமாகக் காணப்படும். அதனால் பணத்தை அதிகமாகச் சேமிப்பீர்கள்.  தாயின் உடல் ஆரோக்கியத்திற்காகப் பணத்தை சேமிப்பீர்கள்.

 

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு  உங்களுக்கு ஏற்ற நாளாக இருக்கும். பணியிடத்தில் பணிகளைக் குறித்த நேரத்தில் முடிப்பதற்கு சக பணியாளர்கள் உதவி செய்வார்கள். அதனால் நீங்கள் சக பணியாளர்களிடம் பொறுமையாகப் பேச வேண்டும். துணையிடம் நல்லுறவை பராமரிக்க நட்பாக நடந்து கொள்ள வேண்டும். பணவரவு அதிகமாகக் காணப்படும். இதனால் பணத்தை அதிகமாகச் சேமிப்பீர்கள். ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்காது. பணியிடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். அதனால் அதனை நீங்கள் சிறப்பாகச் செய்வதற்கு சரியாகத் திட்டமிட வேண்டும். துணையிடம் பேசும்போது கவனமாகப் பேச வேண்டும். அப்போது தான் நல்லுறவை பராமரிக்க முடியும். பணவரவு சுமாராகக் காணப்படும். ஆரோக்கியத்தில் கால் வலி பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.

 

மகரம்

 

மகரம் ராசிக்காரர்களுக்கு  மற்றவர்களிடம் பேசு போது கவனமாகப் பேச வேண்டும். பணியிடத்தில் சக பணியாளர்கள் உங்களின் பணியில் பிரச்சனையை ஏற்படுத்துவார்கள். அதனால் நீங்கள் பணியிடத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நிதிநிலைமையில் வளர்ச்சி காணப்படும். உங்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

 

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு  முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாளாக இருக்காது. பணியிடத்தில் பணிகள் அதிகமாகக் காணப்படும். அதனால் பணிகளை முடிப்பதற்கு சரியாகத் திட்டமிட வேண்டும்.  பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ள்ளதால் பணத்தை கவனமாகக் கையாள வேண்டும். ஆரோக்கியத்தில் தொடை மற்றும் இடுப்பு வலி பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.

 

மீனம்

 

மீன ராசிக்காரர்களுக்கு முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாளாக இருக்கும்.  உங்களின் திறமையை வெளிப்படுத்துவீர்கள். உங்களின் துணையிடம் அன்பாகவும், பாசமாகவும் பேசுவீர்கள்.  உங்களின் சேமிப்பை அதிகப்படுத்துவீர்கள். ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *