Kelambakkam: மகளிர் சுய உதவி குழுக் கட்டிடம் திறப்பு!

கேளம்பாக்கம் ஊராட்சியில் கட்டி முடிக்கப்பட்ட திட்டங்களின் திறப்பு விழா மற்றும் புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. திருப்போரூர் ஒன்றிய பெருந்தலைவர் இதயவர்மன் கலந்து கொண்டு கட்டிடங்களைத் திறந்து வைத்து அடிக்கல் நாட்டினார்.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ள தமிழ் அன்னை சமுதாய நலக்கூடம் தொண்டு நிறுவனம்மூலம் சுமார் 30 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற மறு சீரமைப்பு பணி,

சாத்தங்குப்பம் சாவடிக்குளம் நடைபாதை பூங்காவில் உள்ள கல்வெட்டு, சாத்தங்குப்பம் பகுதியில் புதிதாகக் கட்டியுள்ள மகளிர் சுய உதவி குழுக் கட்டிடம் ஆகியவற்றின் திறப்பு விழாவும், கேளம்பாக்கம் கே.எஸ்.எஸ் நகர் மற்றும் சாத்தங்குப்பம் சாவடிக்குளம் பகுதியிலும் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க அடிக்கல் நாட்டு விழாவும் ஊராட்சி மன்ற தலைவர் ராணி எல்லப்பன் தலைமையில் நடைபெற்றது,

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராகதிருப்போரூர் ஒன்றிய பெருந்தலைவர் திரு. எஸ்.ஆர்.எல் இதயவர்மன் கலந்து கொண்டு பணிகள் முடிவுற்ற கட்டிடங்களைத் திறந்து வைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க அடிக்கல் நாட்டினார் இந்த நிகழ்ச்சியில் திமுக தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் எல்லப்பன் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *