சைடு பிசினஸ்ஸை தொடங்கினார் சைத்ரா ரெட்டி!
கயல் தொடரில் நாயகியாக நடித்து வரும் சைத்ரா ரெட்டி, சொந்தமாகப் பால் பண்ணை ஒன்றை தொடங்கி உள்ளதாக அறிவித்து உள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் எண்ட்ரி கொடுத்த சைத்ரா ரெட்டி. இவர் பெங்களூருவை சேர்ந்தவர். இதையடுத்து ஜீத்தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியலில் வில்லையாக நடித்து அசத்தினார். இதையடுத்து அவருக்குச் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

அதுவும் தமிழில் முதல் படத்திலேயே அஜித்துடன் இணைந்து நடித்துவிட்டார் சைத்ரா ரெட்டி. எச்.வினோத் இயக்கத்தில் வெளிவந்த வலிமை திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்தார் சைத்ரா. இதையடுத்து இவருக்குக் கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் கயல் சீரியல்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார் சைத்ரா ரெட்டி. இந்தச் சீரியல் தான் தற்போது டிஆர்பியில் சக்கைப்போடு போட்டு வருகிறது.

டிஆர்பியில் பிக்பாஸுக்கு டஃப் கொடுக்கும் சீரியலாகவும் கயல் இருந்து வருகிறது. சீரியல் மூலம் பல லட்சம் சம்பாதித்தாலும், தற்போது சைடு பிசினஸ் ஒன்றை தொடங்கி இருக்கிறார். அதுகுறித்த வீடியோவையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மாட்டுப்பால் கறக்கும் வீடியோவைப் பதிவிட்டுள்ள சைத்ரா ரெட்டி, 50 மாடுகளை வைத்திருக்க வேண்டும் என ஆசைப்பட்ட நான், தற்போது மாட்டுப்பண்ணை ஆரம்பித்துள்ளேன் என நெகிழ்ச்சி உடன் பதிவிட்டுள்ளார். அவரின் இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். நடிகை சைத்ரா ரெட்டி பால் கறக்கும் வீடியோ தற்போது செம்ம வைரலாகி வருகிறது.
