Today Rasi Palan: இன்றைய ராசிப்பலன் – 13.04.2024

Advertisements

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டிய நாள். பணியிடத்தில் பாராட்டுகளை எதிர்பார்க்காமல், உங்கள் பணிகளை கடினமாக செய்து உழைக்க வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் எப்பொழுதும் போல பழக வேண்டும். இது இருவருக்கிடையே மகிழ்ச்சியை உண்டாக்கும். பணவரவு அதிகமாக காணப்படாது. சளி, இருமல் போன்ற பாதிப்புகள் ஏற்படும் என்பதால் குளிர்ச்சியான உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நாள். எதிலும் உறுதி தேவை. பணிகள் அதிகமாக காணப்படும். அதை குறித்த நேரத்தில் முடிக்க உறுதியுடனும் தைரியத்துடனும் பணியாற்ற வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் வெளியிடங்களுக்கு சென்று வருவதால் மகிழ்ச்சி உண்டாகும். பணவரவு வர கடினமாக உழைக்க வேண்டும். எண்ணெய் உணவுகள் உண்பதை தவிர்க்க வேண்டும்.

 

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்களுக்கு அமைதியை கடைபிடிக்க வேண்டிய நாள். அனைத்தையும் அனுசரித்து செல்வது நல்லது. உங்கள் பணிகளில் தவறுகள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் கவனமாக பணியாற்ற வேண்டும். உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நாளை பண இழப்பிற்கான வாய்ப்பு இருக்கிறது. அதனால் பணத்தை பத்திரமாக கையாள வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

 

கடகம்

 

கடக ராசிக்காரர்களுக்கு உற்சாகம் கிடைக்கும் நாளாக இருக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடித்து மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக பழகுவீர்கள். பணவரவு அதிகமாக காணப்படும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

 

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். உங்களின் முயற்சியால் பல அதிசயங்களை காண்பீர்கள். உங்கள் பணிகளை திட்டமிட்டு பணியாற்றுவீர்கள். அதனால் மேலதிகாரிகள் உங்களை பாராட்டுவார்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாக காணப்படும். ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது.

 

கன்னி

 

 

 

 

கன்னி ராசிக்காரர்களுக்கு கவலைகள் காணப்படும் நாளாக இருக்கும். பணிகள் தவறுகள் ஏற்ப்படும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் பணிகளில் அதிக கவனம் தேவை. உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சகஜமாக பழக வேண்டும். பயணம் செய்யும் போது பணத்தை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

 

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் அதிகமாக முயற்சி செய்ய வேண்டும். பணிகள் அதிகமாக காணப்படும். அதை குறித்த நேரத்தில் முடிக்க சிரமப்படுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கோபமாக நடந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். தேவையில்லாமல் செலவு செய்வதை தவிர்க்க வேண்டும். யோகா செய்வதன் மூலம் மனதை அமைதிப்படுத்தலாம்.

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு உங்கள் இலக்குகளை அடைவீர்கள். முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாளாக இருக்கும். உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடித்து வெற்றி காண்பீர்கள். இதனால் மேலதிகாரிகள் உங்களுக்கு அங்கீகாரம் தருவார்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். பணவரவு திருப்தி தரும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். முக்கியமான முடிவுகளை நாளை எடுக்கலாம். பணியில் புதிய வாய்ப்புகள் உங்களை தேடிவரும். மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சந்தோஷமாக இருப்பீர்கள். பணவரவு நன்றாக இருக்கும். உங்களின் தேக ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

 

மகரம்

மகரம் ராசிக்காரர்களுக்கு மனதில் கவலைகள் காணப்படும் நாளாக இருக்கும். உங்களின் வாழ்க்கை என்ன என்பதை தெரிந்து கொள்வீர்கள். உங்கள் பணிகளை செய்யும் போது அதிக கவனம் தேவை. எதிலும் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நட்புடன் பழக வேண்டும். பணவரவு மகிழ்ச்சி தராது. தேவையில்லாமல் செலவு செய்வதை தவிர்க்க வேண்டும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.

 

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். உங்கள் பணிகளில் தவறுகள் ஏறபடாமல் இருக்க கவனமாக பணியாற்ற வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நல்ல முறையில் நடந்து கொள்வீர்கள். பணம் தொலைந்து போகும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் பணத்தை பத்திரமாக கையாள வேண்டும். பல்வலி ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது.

 

மீனம்

 

மீன ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். பயனுள்ள மற்றும் முக்கியமான முடிவுகளை தைரியமாக எடுப்பீர்கள். பணியில் உங்கள் திறமையை வெளிப்படுத்துவீர்கள். எனவே உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாக காணப்படும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *