Advertisements

டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 24 ஆவது போட்டியில் சேலம் அணியை வீழ்த்தி நெல்லை அணி வெற்றி பெற்றுள்ளது.
சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 24 ஆவது போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் – சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சேலம் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்தது. இதில், அதிகபட்சமாக ஹரிநிஷாந்த் 36 ரன்களும், ஈஸ்வர் 31 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து, 141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெல்லை அணி 16 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது. இதில், மிகவும் சிறப்பாக விளையாடிய சந்தோஷ்குமார் 50 ரன்களும், அதிஷ் 50 ரன்களும் எடுத்து அசத்தினர். இதன்மூலம், நெல்லை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
Advertisements




