தமிழக சட்டப்பேரவையில் 5-வது நாள் மானியக் கோரிக்கை விவாதம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஐந்தாவது நாளாக இன்று மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஐந்தாவது நாளாக இன்று மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. இதில் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை, நீதி நிர்வாகம், எரிசக்தித் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள், சட்டத்துறை, இந்து சமய அறநிலையத்துறை  ஆகிய துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம்  நடக்கிறது. இந்த விவாதத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு உரையாற்றுவார்கள்.
இதைத்தொடர்ந்து, உறுப்பினர்களின் கேள்விகளுக்குச் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்  ரமேஷ் ஆகியோர் பதில் அளித்து உரையாற்றுவார்கள். நிறைவாக, இருவரும் துறைச் சார்ந்த புதிய அறிவிப்புகளையும் வெளியிடுவார்கள். மேலும், சிறப்பு திட்ட செயலாக்கத்துறை முதலமைச்சர் விஜய்யிடம் உள்ளது. அவர் அல்லது அவரது சார்பில் அமைச்சர்கள் யாரேனும் அறிவிப்புகளை வெளியிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *