அயர்லாந்தை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி..!

Advertisements

இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்து அணியை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றிப்பெற்றுள்ளது.

இந்தியா மற்றும் இலங்கையில் இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், 6 ஆவது லீக் போட்டியில் இலங்கை,அயர்லாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் விளையாடிய இலங்கை அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் சேர்த்தது.

அதிகபட்சமாக குசால் மெண்டிஸ் 56 ரன்களும் கமிந்து மெண்டிஸ் 44 ரன்களும் குவித்தனர். இதன் பின்னர்,களமிறங்கிய அயர்லாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 143 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. பந்து வீச்சு தரப்பில் இலங்கை அணியின் ஹசரங்கா, தீக்ஷனா ஆகியோர் தலா 3 விக்கெட்டும்,பதிரனா 2 விக்கெட்டும் வீழ்த்தி வெற்றிக்கு வழிவகை செய்தனர். இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி உலக கோப்பையில் தனது முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *