பெய்ரூட்: ஹஸ்புல்லா மீதான அடுத்த கட்ட போர் விரைவில் துவங்கும் என இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் யோவாவ் கலன்ட் தெரிவித்தார்.
ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போர் ஒரு பக்கம் நடக்கும் நிலையில், அதற்கு ஆதரவாக லெபனானிலிருந்து செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிரான தாக்குதலை, இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில், பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஹிஸ்புல்லாவுக்கு எதிராகத் தரைவழி தாக்குதல் நடத்துவதற்கு தயாராக இருக்கும்படி, தன் வீரர்களை இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. அதற்கு வசதியாக லெபனான் தெற்கு எல்லையில் டாங்கிகள் குவிக்கப்பட்டுள்ளன.
இந்தச் சூழலில், ‘ ஹஸ்புல்லா மீதான அடுத்த கட்ட போர் விரைவில் துவங்கும்’ என இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் யோவாவ் கலன்ட் திட்டவட்டமாகத் தெரிவித்தார். இதனால் மேற்காசிய நாடுகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இதற்கிடையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ‘ இஸ்ரேலின் எதிரி ஈரான் அரசு தான். மக்கள் அல்ல. அரசாங்கம் வீழ்ச்சியடையும்போது, அதன் மக்கள் சிறப்பாக இருப்பார்கள்’ எனத் தெரிவித்தார்.
