சென்னை மக்களுக்கு குட் நியூஸ் – இன்று மழைக்கு வாய்ப்பு!

Advertisements
சென்னையின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுவதாகத் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்தக் காற்றுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *