கூகுள், யூனிட்டி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு உடன்பாடு கையொப்பம்..!

தமிழ்நாட்டு மாணவர்கள் வாய்ப்புகளைப் பெற்றுக் கோலோச்சுவதற்கு கூகுள், யூனிட்டி நிறுவனத்தினருக்கும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துக்கும் இடையே புரிந்துணர்வு உடன்பாடு கையொப்பமாகியுள்ளது.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் முதல்வன் திட்டம் உலகின் தலைசிறந்த நிறுவனங்களில் பணிவாய்ப்பு என இலட்சக்கணக்கான மாணவர்களின் வேலைவாய்ப்புக் கனவுகளை நிறைவேற்றியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

200 பில்லியன் டாலர் மதிப்புடன் உலகளவில் வளர்ந்துவரும் விளையாட்டுத் துறையிலும், தமிழ்நாட்டு மாணவர்கள் வாய்ப்புகள் பெற வேண்டும் என்பதற்காக் கூகுள், யூனிட்டி   நிறுவனத்தினருக்கும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துக்கும் இடையேப் புரிந்துணர்வு உடன்பாடு கையொப்பமாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எல்லாத் துறைகளையும் போல் விளையாட்டுத் துறையிலும் தமிழ்நாட்டு மாணவர்கள் உலகம் முழுவதும் சென்று சிறந்து விளங்க நான் முதல்வன் திட்டம் துணையாக நிற்கும் என்று உதயநிதி எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *