
செங்கல்பட்டு மாவட்டம் படூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் அமைச்சர் அன்பரசன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
படூர் ஊராட்சித் தலைவர் தாரா ஏற்பாட்டில், திருப்போரூர் ஒன்றியத் தலைவர் இதயவர்மன் தலைமையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இம்முகாமை அமைச்சர் அன்பரசன் மாவட்ட ஆட்சியர் சினேகா ஆகியோர் குத்துவிளக்கேற்றித் தொடக்கி வைத்தனர்.
இதையடுத்து மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்களை அமைச்சர் அன்பரசனும் மாவட்ட ஆட்சியர் சினேகாவும் பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய திமுக செயலாளர் சேகர், கூடுதல் ஆட்சியர் நாராயண சர்மா, திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் சுதாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.




