
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவுக்கு ஒரு வாரமே இருப்பதால் அரசியல் கட்சியினர் இறுதிகட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுகவும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுகவும் போராடி வருகிறார்கள். கோவையில் தொழில்தறை வளர்ச்சியை குறிவைத்து செந்தில் பாலாஜி செய்யும் பிரச்சாரம் அதிமுக, பாஜகவை கதிகலங்க வைத்துள்ளது.
கோவை மாவட்டம் அதிமுகவின் கோட்டையாகவே இருந்துள்ளது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை பிடித்தாலும், கோவையில் ஒரு இடத்தில் கூட வெற்றிற பெறவில்லை. கோவையின் 10 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி தான் வெற்றி பெற்றது. கோவையில் திமுகவை வெற்றி பெற வைப்பதற்காக இந்தமுறை செந்தில் பாலாஜியை நேரடியாக களமிறக்கியுள்ளனர்.
இதனால் கோவை தெற்கு தொகுதியை தமிழ்நாடே உற்று நோக்கி கொண்டிருக்கிறது. செந்தில் பாலாஜியின் வருகை கோவை மாவட்டம் முழுவதும் திமுகவுக்கு பாசிட்டிவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் கொங்கு மண்டலத்தில் அதிமுக கூட்டணியை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல. கோவையில் உள்ள அனைத்து தரப்பு மக்களிடமும் ஆழமான நம்பகத்தன்மையை உருவாக்கியுள்ளனர்.
கோவை தொழில் மாவட்டம். பம்ப்செட் மோட்டார், கிரைண்டர், ஜவுளி, ஆட்டோமொபைல் தொடர்பான உற்பத்தி அதிகளவு உள்ளது. பல ஆயிரக்கணக்கான குறு சிறு நடுத்தர நிறுவனங்கள் கோவையில் அதிகமுள்ளன. இதற்காக கோவையின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது அவசியம். அதிமுக அதில் அதிக கவனம் செலுத்தினர். கடந்த 2021 தேர்தலில் கோவையில் அதிமுக வெற்றி பெறுவதற்கு அதுவும் ஒரு காரணம்.
அந்த அரசியலை செந்தில் பாலாஜி கையில் எடுத்துள்ளனர். கோவையில் 100க்கும் மேற்பட்ட தொழில் அமைப்புகள் உள்ளன. செந்தில் பாலாஜி அந்த அமைப்புகள் ஒவ்வொன்றையும் நேரடியாக சென்று சந்தித்து வருகிறார். அவர்களின் பிரச்சனைகளை கூர்ந்து கவனித்து ஆலோசனை செய்கிறார். கடந்த காலங்களில் செய்த பணிகள், மேற்கொண்டு செய்ய போகும் பணிகளை விளக்குகிறார்.
கடந்த 10 நாட்களில் தொடர்ந்து தொழில் அமைப்பினரை சந்தித்து பேசி வருகிறார். அவர்களிடம் நம்பகத்தன்மை ஏற்படுத்துற்காக தான் கோவை தெற்கு தொகுதியில் குடியேறியுள்ளார். “தமிழ்நாட்டின் மொத்த உற்பத்தியில் கோவை 15 சதவீதம் உற்பத்தி பங்களிக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்தால் கோவையின் உற்பத்தியை 25 சதவீதமாக உயர்த்துவேன்” என்று கூறியுள்ளார்.
25 சதவீதம் உற்பத்தி என்பதை இலக்காக வைத்து பணியாற்றுவேன் என்று செந்தில் பாலாஜி உறுதியளித்துள்ளார். மேலும் கோவையின் உள்கட்டமைப்பு வசதிகளில் கூடுதல் கவனம் செலுத்துவோம் என்றும் அவர் கூறியுள்ளார். இது தொழில்துறையினரிடம் வரவேற்பை பெற்றுள்ளது. அதிமுக கூட்டணி அதிர்ச்சியடைந்துள்ளனர்.



